Saturday, July 31, 2010

பத்து விதிகள்

I am reading the meaning of Ten Commandments again. Exodus 20:2-17 .. My questions to Pastors: Why does GOD only talk of Israel not world?

In India, we can make sure GOD has blessed all if

(1) there are more trains to Coimbatore from Bangalore than trains of Omni Buses

(2) People get real affordable housing with a carpet area of 600 sqft, as set by World stds. for $ 2000 per family, with 2 R / 2 T, H, K, Ba

(3) naturally available seeds are sown to give more yields, collected from different parts of world.

(4) Politicians do not engage in illegal business

(5) Politicians really take care of people they represent

(6) Politicians work honestly


(7) Everyone respects each other, their work and others, and give the best.

I call these 7 tenets of the world, to have GOD bless you (c) me

Actually the first 2 tenets

(1) You shall provide the best transportation expected

(2) You shall provide affordable housing.



Wednesday, July 21, 2010

ஜோதிடம் விஞ்ஞான முறையில்

ஜோதிடம் விஞ்ஞான முறையில் படிக்க இங்கே ஜாயின் பண்ணுங்க.



Subscribe to KPSystem




Powered by us.groups.yahoo.com


Wednesday, April 7, 2010

டாய்லெட் பிரச்சனை

டாய்லெட் பிரச்சனை தெருவில் கொடுமை...அப்பட்டமான உண்மை. இந்தியாவில் அறுபது சதவிகிதம், நல்ல கழிப்பிட வசதி இல்லாமல் இருக்கிறார்கள். முதலில் பொது கழிப்பிடங்களை நாம் நன்றாக ( சுத்தமாக, சேதப்படுத்தாமல், கிறுக்காமல் ) பயன் படுத்த வேண்டும். தண்ணீர் வசதி செய்து தர, அணைத்து ப்லாகர்களும் எழுத வேண்டும். கவர்ன்மன்ட் ஒத்துக்கொள்ளுமா....?

நான் வேலை செய்யும் இடத்தில, கை அலம்பும் தண்ணீர், தோட்டத்திற்கு பயன் படுத்துகிறார்கள்.

நான் பெல்ஜியத்தில் பார்த்தது, தெருமுனையில் சிறிய ஓட்டை போல இறுகும், அதில் தான் ஆண்கள் வரிசையாக ஒன்றுக்கு செல்வார்கள், ஓபனாக! பெண்களுக்கு மூவபிள் பாட்டி.

நியூ யார்க்கில் டைம்ஸ் ஸ்கொயரில் புத்தாண்டு இரவில், எல்லோரும் ( பெண்கள் உட்பட ) ரோட்டில் தான் மூத்திரம் பெய்வார்கள். அங்கும் விதிவழக்கல்ல..

ஹூஸ்டனில் நகரில், மேக்ட்னால்ட்சில் காசு கொடுத்து உணவகத்தில் சாப்பிடாமல் டாயலட் போகலாம். இந்தியாவில் முடியுமா?

மினிமம் சார்ஜ்

ஏர்டெல் போன்றோர், மினிமம் மாதம் ஒரு குறிப்பிட்ட யுசெஜ் செய்தால், கஸ்டமர் கால்ஸ் சர்வீஸ் சார்ஜ் ப்ரீ என்று ப்ளேன் கொண்டு வருவார்கள். எப்படி அவர்கள் பணம் போட்ட டி கம்பெனிக்கு ஆப்ரிக்கா கம்பெனி மூலம் திருப்பி கொடுப்பது?

ஏர்டெல் பெங்களூரில் பதினைந்து நிமிடத்திற்கு மேல், கால் டிராப் ஆகிவிடும். அதனால் நான் வைத்திருப்பது வோடபோன் தான். வீட்டில் டாட இண்டிகாம், ஒரே நெட்வர்க் வேண்டாமே.

ப்ரீ பெயிடில் அவர்களுக்கு லாபம் இல்லை. அதனால் சார்ஜ் தான்! போஸ்ட் பைடில் சர்வீஸ் கால் இலவசம் என்று தான் சொல்கிறார்கள்.

நம்ம காசை பேங்கில் வைத்திருக்க நாம் சர்வீஸ் சார்ஜ் கொடுக்கும் கதை தான் இது. அமெரிக்காவில் டோல் ப்ரீயில் கூப்பிட்டாலும் ஒரு என்கொயரிக்கு ஒரு டாலர் சார்ஜ் செய்வார்கள், சிறு அக்கவுண்டிற்கு. டெக்சாஸ் பேங்கில் ஒரு அக்கவுன்ட் இன்றும் வைத்துள்ளேன், வருடம் ஐம்பது டாலர் மினிமம் மெயண்டைனன்ஸ் சார்ஜ் செய்கிறார்கள். ஆன் ஹோல்ட் அக்கவுன்ட் வைக்க வருடம் நூறு டாலர். அதற்கு இது பெட்டர்.

சிடிபேன்க்கில் ஒரு ஆயிரம் ருபாய் செக்கை நேரில் சென்று டெல்லர் மூலம் டெபாசிட் செய்தால், முந்நூறு ருபாய் ப்ளஸ் சர்வீஸ் டேக்ஸ் பனால். ஐ.சி.ஐ.சி.ஐ யில் நூற்றி ஐம்பது ப்ளஸ் சர்வீஸ் டேக்ஸ. சர்வீசுக்கே சர்வீஸ் டேக்ஸ். போனில் கூப்பிட்டு திட்டினால், வீட்டிற்கே ஒருவர் வந்து செக் வாங்கி செல்வார்.

Monday, April 5, 2010

தங்கம்

பெண்களுக்கு சம உரிமை சொத்தில் இல்லாத காரணம், அந்த காலத்தில் தங்கமாக சீதனம் கொடுத்தார்கள். இப்போது தான் சட்டம் இருக்கே? இருந்தாலும் விடிவு இல்லை. ஆண் பிள்ளைகள் - அக்கா தங்கைகளுக்கு இன்றும் கொடுப்பதில்லை. என் அக்காவிற்கு, என் அப்பாவின் பாதி சொத்து கல்யாண சமயத்தில் செலவானது. ஒவ்வொரு பைசாவிற்கும் அப்பா கணக்கு வைத்திருக்கிறார். அவருக்கு பிறகு, என் அக்கா மீண்டும் சொத்து கொடு என்று வந்து கேட்கமாட்டாள் ( இதற்கும், சொந்த வீடு வைத்திருக்கும் டாக்டர் மாப்பிள்ளை அமெரிக்க சிடிசன் வேறு ) என நிச்சயம் கிடையாது. இப்போது சொல்லுகிரார்ல், நம்பியூரில் இருக்கும் காட்டில், பாதி அவளுக்கு வேண்டுமாம், பார்ம் ஹவுஸ் கட்ட. இப்போதும் இரண்டு வருடம் ஒரு முறை லீவில் வந்தால் இரண்டு மூன்று லட்சங்கள் அவள் குடும்பத்திற்கு அப்பா தான் செலவு செய்கிறார்.

நல்ல வாழ்க்கைக்கு தங்கம் போடுவது கொழுப்பு தான். காசில்லாபோது அந்த கொழுப்பு தான் அடமானமோ விற்றோ வயிற்றுக்கு சோறு போடும். சொந்தங்கள் வந்தால் ஒரு வாய் காப்பி தண்ணி கொடுக்க முடியும். இந்த மாதிரி பதிவுகள் படிக்க இன்டர்நெட்டுக்கு பில் கட்ட எங்கிருந்து வரும் காசு? :-)

என்னமோ ஐ.டி. துறையில் தான் வேலை நிரந்தரம் என்று சொல்கிறீர்கள். இப்போது ஒவ்வொரு நாளும் கொடுமைங்க. நானும் படிப்பு முடித்தவுடன் நாலு பேருக்கு வேலை கொடுக்கும் எண்ணத்தில் திருப்பூரில் சிறு ஐ.டி. கம்பெனி ஒன்று ஆரம்பித்தேன். வேலை செய்தவர்கள் பெரிய கம்பெனிக்கு போவதற்கே, படியாக பயன்படுத்தினார்கள். பெங்களூர் வந்தால் வேலை இல்லாமல் இருக்கும் என் நண்பர்கள், எனக்கு வாழ்வு கொடுத்தவர்கள், கஷ்டத்தில், கட்டட மேஷ்திரிகளாக ( சிவில் படித்தவர்கள், ஏசி ரூமில் வாழ்ந்தவர்கள் ) இருப்பதை காட்டுகிறேன். பிக் பஜாரில் தினம் நூறு ரூபாய்க்கு சாமானம் கட்டுகிறார்கள். எனக்கு கிழே வேலை பார்த்த ஒருவன் கோரமனகளா செட்டிநாடு ஹோட்டலில் ஆர்டர் எடுக்கிறான், உணவு இலவசம், இரநூறு ருபாய் சம்பளத்திற்கு. எங்கே போயிற்று சங்கங்கள் ஐ.டி. துறையில்? பணக்காரர்கள் செலவு செய்யாவிட்டால், ஏழைகள் எப்படி வாழ்வார்கள்? கார்ல் மார்க்ஸ் எழுதிய கேபிடல் ஒரு முறை படித்து விடவும்.

ட்ராபிக் சிக்னல் அங்காடி தெரு

ட்ராபிக் சிக்னல் ( ஹிந்தி ) தோற்றுவித்த தாக்கம் அங்காடி தெரு ஏற்படுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஒரு தெருவை வைத்து நடக்கும் கதை. வசந்த பாலன் தமிழ் படுத்த முடியவில்லை. குறிப்பிட்ட அன்னாசி சமூகத்தை ( சரவணா ஸ்டோர்ஸ் போன்றோரை ) கிண்டல் செய்கிறார்கள். அதை தான் பேசாக வைத்து கதை பண்ணியது, அதில் வேலை செய்த என் நண்பர் கூறியது உண்மையாக இருக்கும் பட்சத்தில், தோற்றுவிட்டார்கள். ஜெயமோகனின் நாகர்கோவில் வசனங்கள், திருசெந்தூர் வழக்கத்திற்கு ஈடாகாது. அங்கு ஈயம் உலகம் தொழில் பட்டறை வைத்திருக்கும் மாமா சொன்னது, மொழியால் பூ சுத்துறாங்கப்பு!

நான் திருப்பூரை சேர்ந்தவன். ஒரு பிரபல சமூகத்தை சேர்ந்தவன். பாட்டாளிகள் வர்க்கம் என்று பறை சாற்ற விருப்பம் இல்லை. அங்கு இன்றும், கிட்டத்தட்ட கொத்தடிமை முறை ( பஸ் வந்து அழைத்து சென்று, திரும்ப டிராப் செய்யும் வசதி, உங்களுக்கு ரூமோடு - அதே கருமமான மெஸ் ), குழந்தை தொழிலாளர் முறை தான். பத்து வயசு பொடியன்ஸ் இன்றும் யாரவது ஆபிசர்கள் வந்து கேட்டால், பதினெட்டு என்று சொல்லும் பாங்கு உண்டு. பனியன் பீசுகளை அடுக்க, சிறு கைகளே உதவுகின்றன. நானும் என் அப்பாவின் தொழில் சாலையில் ( காட்டை வித்து, பனியன் கம்பெனி வைத்தார் ) விடுமுறையில் வேலை செய்துள்ளேன். பணம் செலவாவது தெரியாது. கந்து வட்டிக்காரர்கள் திளைக்கிறார்கள். இன்றும் சென்னை விட திருப்பூரில் சிக்கன் / மட்டன் பிரியாணி விலை அதிகம்.

சொந்தக்காரர்கள் வீட்டிற்கு சிவகாசி சென்ற பொது, தீப்பெட்டி அடுக்கும் ( இன்றும் ) பொடியன்ஸ் பார்த்துள்ளேன். தீப்பெட்டி அடுக்கி சம்பாரித்து மெக்கானிக்கல் எஞ்சினீரிங் படித்த என் மாமா, இப்போது கோடீஸ்வரர், அங்கு அச்சாபீஸ் வைத்திருப்பதும் ஊருக்கு தெரியும். அய்யன் பட்டாசு ஆட்களை பற்றியும் அறிவேன்.

எழுதி தான் நம் கோவத்தை அடைக்குகிறோம்.

Monday, March 1, 2010

தமிழ் வலைப்பதிவர் ஒருங்கிணைப்பு

வணக்கம்.

தமிழ் வலைப்பதிவர் ஒருங்கிணைப்பு இந்த வலைபதிவு ஆரம்பிக்க காரணம், நண்பர்கள்.

குறிப்பாக விஜயஷங்கர், ராஜு, ராஜ்குமார் மற்றும் ரங்கன்.

அனைவருக்கும் நன்றிகள்.

இனி, இங்கு பரப்பரப்பான ப்ளாகர்கள் யார், சிறந்தவை எவை என்பன இருக்கும்.

தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.

தமிழருக்காக.